அனல் பறக்க உருவாகி வரும் விஜயின் லியோ.! சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான glimpse இதோ…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பது நாம் அனைவரும் தெரிந்துகொண்டு. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாக்கி வரும் இரண்டாவது திரைபடம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதை தொடர்ந்து. தற்போது லியோ படத்தின் மூலம் இந்த கூட்டணி இணைந்து இருக்கிறது.

இத்தனை நாட்களாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் டைட்டில் பிரமோ ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆனது.

மேலும் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைகிறதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படம் விக்ரம் படத்தின் தொடர்கதையாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விக்ரம் படத்தில் இடம்பெற்று இருந்த ஒரு சில காட்சியை வைத்து லியோ எல்சியு-வில் இணைகிறது என்று ரசிகர்கள் இணையதளத்தில் பல புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மிக தீவிரமாக நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் பலர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment