பரமா பரமா ரிலீஸ் முன்னாடியே நம்ம சாதனையை நொறுக்கிட்டாங்க.! தலைவருக்கே தண்ணி காட்டிய தளபதி

Jailer vs Leo: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் ஒட்டு மொத்த வசூலையும் லியோ திரைப்படம் முன்பதிவிலேயே முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்டது. இந்த படத்தின் நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்த நிலையில் அதிரடியாக ரூபாய் 650 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டியது. ஜெயிலர் படத்தின் வெற்றி மூலம் நடிகர் ரஜினிகாந்தின் பாக்ஸ் ஆபீஸ்சில் சாதனை படைத்ததால் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வந்தனர்.

ஆனால் தற்பொழுது ரிலீசுக்கு முன்பே நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் ஜெயிலர் பட சாதனையை முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் 6 வாரத்திற்கு முன்பே இங்கிலாந்தில் அதற்கான முன்பதிவு தொடங்கியது.

அந்த வகையில் இங்கிலாந்தில் ஜெயிலர் படம் மொத்தமாக செய்த வசூலை ரிலீசுக்கு முன்பே லியோ திரைப்படம் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அப்படி ஜெர்மனியில் மட்டும் தற்பொழுது வரை 2500க்கும் மேற்பட்ட டிக்கட்கள் விற்பனையாகியுள்ளதாம். இதன் மூலம் 68 ஆயிரத்து 500யூரோக்களை  லியோ படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது .

அதேபோல் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மொத்தமாகவே ஜெர்மனியில் 66,141 யூரோக்களை மட்டுமே வசூல் செய்து இருந்தது இதன் மூலம் முன்பதிவிலேயே ஜெர்மனியில் ஜெயிலர் பட வசூல் சாதனையை லியோ அசால்ட்டாக முறியடித்துள்ளது. இதனை அடுத்து ஜெர்மனியில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் பெற்றிருக்கும் நிலையில் இப்படம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் யூரோக்களை வசூல் செய்தது. இதற்கு அடுத்தபடியாக கமலின் விக்ரம் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கும் நிலையில் மூன்றாவது இடத்தில் லியோ திரைப்படம் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.