தனது 8-வது திருமண வருடத்தை லாக் டவுனில் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் கொண்டாடிய காவலன் பட நடிகை.!

0

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த பல நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத் திரைக்கு அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்கள் பலர் உள்ளார்கள்.

அந்தவகையில் விஜய் மற்றும் அசின் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடித்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் காவலன் இத்திரைப்படத்தின் மூலம் வடிவேலுக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை நீபா.

இத்திரைப்படத்தை தவிர இன்னும் சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமாகி சீரியலில் நடிப்பதை தொடர்ந்தார்.

அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

neebha 1
neebha 1

இந்நிலையில் நீபா கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இந்த தம்பதியர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர்களின் எட்டாவது திருமண நாளை தனது இரு குழந்தைகளுடன் சமீபத்தில் கொண்டாடி உள்ளார்கள்.

neebha
neebha

அந்தப் புகைப்படத்தை லவ் யு பேபி என்று கூறி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நீபா. இதனை அறிந்த ரசிகர்களும் நீபாவிற்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.