கணவனை இழந்த தனது ரசிகரின் மனைவிக்கு விஜய் செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் எடுக்கப்பட்ட வந்த நிலையில் இவரது ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனைப் பார்த்த திரைப்பிரபலங்கள் மிரண்டனர் ஒரு சூட்டிங் ஸ்பாட்டிற்கு இவ்வளவு கூட்டமா என  அதிர்ச்சி அடைந்தனர்.

விஜய் அவர்களுக்கு ரசிகர் மட்டுமே கோடிக்கணக்கில் உள்ளனர். பலர் விஜய்க்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் உள்ளனர் என்று பல பிரபலங்கள் கேட்டு உள்ளதை நாம் பார்த்துள்ளோம் அதற்கு அவரது ரசிகர்கள் எப்பொழுதும் கூறுவது விஜய் அவர்கள் எங்களுடைய உணர்வுகளுக்கு எப்பொழுதும் மதிப்பு அளிப்பவர் என்று கூறி வருகிறார்கள்.

அனிதாவின் தற்கொலை மற்றும் தூத்துக்குடி இதுபோன்ற பிரச்சனைகளுக்கு விஜய் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையத்தில் செயல்பட்டுவரும் அவருடைய ரசிகர் மன்றத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள அவரது ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த விஜய் அவர்கள் ரசிகரின் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் அந்த குடும்பத்திற்கு 50,000 கொடுத்துள்ளார் மற்றும் அறுதல் கூறியுள்ளர் விஜய். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் விஜய் அவர்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment