தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து தனது 67-வது திரைப்படமான லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறதாம்.. சினிமாவில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் விஜய் வெளி உலகில் சற்று மாறுபட்டவர் என கூறப்படுகிறது ஆம் அவர்களுடைய நண்பர்களை சந்தித்தால் போதுமாம்..
விஜய் அரட்டை அடிப்பது ஜாலியாக பேசுவது போன்ற எல்லாம் பண்ணுவார் என பல தடவை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. இந்த நிலையில் விஜய் நண்பர்கள் குறித்து சினிமா பிரபலம் அந்தனன் பேசி உள்ளது என்னவென்றால்.. நடிகர் விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் பலர் உள்ளனர் இந்த சினிமா சமயங்களில் நடக்கும் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் மறந்து அவர்கள் அரட்டை அடிப்பதற்கு..
இந்த நட்பு வட்டாரம் உதவி புரிகிறது அரட்டை அடிக்கும் போதும் சினிமாவில் நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசுவார்களா என கேட்டால் கண்டிப்பாக இல்லை அரட்டை நேரங்களில் அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களை வெளியே சொல்ல முடியாது அதை வெளியே சொன்னால் தற்சமயம் அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறிவிடும் என அந்தனன் கூறியுள்ளார்.
நெருங்கிய நண்பர்கள் எனக் கூறும் பொழுது அதில் நடிகர் சிபி ராஜ், ஜீவா, இயக்குனர் அட்லி, லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னடா சொல்றீங்க எனக் கூறி அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.