அந்த படத்தில் பட்டதே போதும்.? லியோ படத்திற்கு விஜய் போட்ட முதல் கண்டிஷன்.!

vijay
vijay

ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய் பகவதி படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் அன்றிலிருந்து இவருடைய மார்க்கெட் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிகமாக உருவாகினார். அதை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடித்த வாரிசு படம் கூட 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக்  படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு விஜய் ஒரு புதிய கண்டிஷனை போட்டு இருந்தாராம்..

அதாவது வாரிசு படத்தில் நடிக்கும் சில காட்சிகள் வெளியாகின. இதனால் விஜய் ரொம்ப அப்செட் ஆனார் லியோ படத்தில் அந்த தவறு நடக்கக் கூடாது என்பதால் வாரிசு படத்தில் இருந்த அதே பவுன்சர்கள் லியோ படத்திற்கும் வந்ததால் முதல் வேலையாக அவர்களை மாற்றி விட்டு புது கம்பெனியில் இருந்து பவுன்சர்களை வர வைத்துள்ளார்.

அவர்களை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட ஒரு குழு உள்ளது அவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஊழியர்களின் ஃபோனை வாங்கிக் கொண்டு காரில் போட்டு விடுவார்களாம் போன் ஏதாவது வந்தால் மதிய நேரத்தில் அவர்களிடம் போனை கொடுத்து பேச சொல்வார்களாம்..

பிறகு வாங்கி வைத்துக் கொள்வார்களாம். பட குழுவிற்கு யாராவது விசிட் வந்தால் அவர்களை முழுவதுமாக செக் செய்து அப்புறம்தான் உள்ளே அனுப்புவார்களாம். லியோ படத்திலிருந்து ஒரு சீன் கூட வெளியாக கூடாது என விஜய் மும்பரமாக இருக்கிறாராம். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.