தளபதி விஜய்க்கு ஃபேவரைட் சாங் இதுதான் – இளம் இசையமைப்பாளர் தமன் சொன்னது.!

thaman
thaman

தளபதி விஜய்  பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முதல் முறையாக தெலுங்கு பக்கம் திசை திருப்பி கொண்டு நடித்து வருகிறார். தனது 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி  இயக்குகிறார் வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து வருகிறது.

விஜய் 66 என தற்காலிகமாக இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 66 படத்தில் விஜய் உடன் கை கோர்த்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம், யோகிபாபு, பிரபு, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ் என ஒரு மிகப் பெரிய ஜாம்பவான்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா கைகோர்த்துள்ளார். முதல்முறையாக தளபதி விஜய்யுடன் கை கைகோர்க்கிறார் இசையமைப்பாளர் தமன். இவர் பாய்ஸ் படத்தில்  இசை அமைத்து அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் விஜயுடன் இப்பொழுதுதான் கைகோர்க்கிறார்.

என்றாலும் விஜய் எப்பொழுதெல்லாம் இசையமைப்பாளர் தமனை பார்க்கிறாரோ அப்போதெல்லாம் அவரது பாடல்கள் குறித்து அதிகமாக பேசுவார் எனது பாடல்களை அதிகமாக ரசிக்கக்கூடிய வரும் விஜய் தான் என கூறினார். அண்மையில் பேட்டி ஒன்றில் தமன் பேசியது.

விஜய் ஒரு இசைப் பிரியர் என்னுடைய இசையில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் ரேஸ் குர்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள  சினிமா சூப்பிஸ்தவாமா இந்த பாடல் தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும் அது மட்டுமில்லாமல் என்னுடைய இருபது முப்பது பாடல்கள் போல விஜய்க்கு ரொம்ப பிடிக்கும் எனவும் தகவல் கூறினார்.