விஜயின் பீஸ்ட் படம் ஒரே நாளில் 35 காட்சிகள் ரத்து.. எங்கு தெரியுமா.? தலைவலியை சந்திக்கும் படக்குழு.!

தமிழ் சினிமா உலகில் பல ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தனக்கென ஒரு நிரந்தர ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இவரது படங்கள் வெளிவருகிறது என்றால் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி வருவார்கள்.

அப்படி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர், பிகில் போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கியதை அடுத்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார். இந்த படமும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி பல திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் படம்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. பீஸ்ட படத்தின் கதை சுவாரஸ்யம் இல்லை, லாஜிக் மீறல் போன்ற பல  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் நெல்சனின் முந்தைய படமான டாக்டர் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது.

டாக்டர் படத்தில் புதிய காமெடியனாக ரெடின் கிங்ஸ்லி நடித்து அசத்தியிருந்தார். பீஸ்ட் படத்திலும் ரெடிங் கிங்ஸ்லி நடித்துள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் காமெடியும் பெரிதாக இல்லை எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் டீஸ்ட் படத்தின் வசூல் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் தற்போது கர்நாடகாவில் ஒரே நாளில் பீஸ்ட் படத்தின் 35 க்கு மேற்பட்ட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாம். இதுவரை விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களில் பீஸ்ட் படம் மிக மோசமான பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment