தளபதி விஜயின் 65வது படத்தின் இசையமைப்பாளர் இவரா.? அப்போ வேற லெவல் தான்

0

vijay 65th movie musician : தற்பொழுது தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் ஆவார். இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது கொரோனா வைரஸ்  காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் தாமதமாகிறது.

இதனை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி2 என்ற திரைப்படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது எனவும் இதற்கு ஹரிஷ் ஜெயராம் அவர்கள் இசையமைக்க உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிஷ் ஜெயராம் அவர்கள் பிரபல இசையமைப்பாளராக இருந்தாலும் தற்பொழுது இவர் பாடிய பாடல்கள் ஹிட்டாகவில்லை எனவே இசையமைப்பாளரை மாற்றிவிடலாம் என படக்குழுவினர் முடிவு எடுத்துள்ளனர்.

தற்பொழுது தெலுங்கு திரைப்படத்தில் தமன் அவர்கள் இசையமைத்த புட்ட பொம்மா பாட்டு  மிகப் பெரிய ட்ரெணடிங் ஆகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   இப்பாடல் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில்  விஜய் அவர்களுக்கும் பிடித்துள்ளதாம் எனவே விஜய் அவர்கள் என்னுடைய 65 படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ன செய்தி வெளிவந்துள்ளது.