20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த விஜயகாந்த் – கடைசியில் அவர் சொன்ன விஷயத்தை கேட்டு வாயடைத்துப்போன இயக்குனர்.!

விஜயகாந்த் சினிமா உலகிலும் சரி, அரசியலிலும் சரி மிக நேர்மையாக  இருந்து வருகிறார். எப்பொழுதும் உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு பேசாதவர் இதனாலையே  ரசிகர்கள் விஜயகாந்த் இருக்கிறார். மேலும் அவரை செல்லமாக கேப்டன் என அழைப்பது வழக்கம் இவர் 80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இவரது கமர்சியல் படங்கள் எப்பொழுதும் சூப்பர் ஹிட் அடிக்கும் அதன் காரணமாகவே ரஜினி, கமல் போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக 90 கால கட்டங்களில் விஜயகாந்த் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பேசும் பஞ்ச் டயலாக், கம்பீரமான உடல், ஆக்சன் கட்சி போன்றவற்றில் பின்னி படலெடுப்பது விஜயகாந்து கைவந்த கலை இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வந்துள்ளன.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். அந்த வகையில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இவருக்கு கேரியரில் மிக மறக்க முடியாத திரைப்படம் இந்த திரைப்படம் வெளியாகி  அதிக நாட்கள் ஓடியது இந்த படம் விஜயகாந்துக்கு 100 வது திரைப்படமாகவும் அமைந்தது.

கேப்டன் பிரபாகரன் படத்தில்  விஜயகாந்த் ரொம்ப மெனக்கெட்டு நடித்தார் அதன் அனுபவங்களை இயக்குனர் ஆர் கே செல்வமணி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் சொன்னது ஒரு காட்சியில் ரோப் கட்டிங் சண்டை காட்சிகள் எடுத்து உன் எதிர்பாராத விதமாக ரோப் அறுந்து  விஜயகாந்த் 20 அடி  பள்ளத்தில் விழுந்துவிட்டார் உடனே நாங்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினோம்

அவர் அதை வெளி காட்டவில்லை மாறாக ஒரு காட்சி உடனடியாக எடு என கூறினாராம் இயக்குனர் ஏன் எனக் கேட்க எனக்கு அடிபட்டு விட்டது என தெரிந்தால் உடனே சண்டை இயக்குனர்கள் வேறு கடினமான காட்சிகளை வைக்க மாட்டார்கள் அதனால் நீங்கள் உடனே அடுத்தடுத்த காட்சி எடுத்தால் நான் நார்மலாக இருப்பது போல நினைத்துக் கொள்வார்கள் என ரகசியமாக இயக்குனருடன்  விஜயகாந்த். தான் செய்யும் வேலை மிக சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார் விஜயகாந்த் எனவும், ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து தான் செயல்படுவார் என ஆர் கே செல்வமணி பதிலளித்தார்.

Leave a Comment