மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் விஜயகாந்த் – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

vijayakanth
vijayakanth

80, 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பல டாப் ஜாம்பவான்கள் ஓடிக்கொண்டு இருந்தாலும் தனக்கு என்ன வருமோ அதில் நிலைத்து நின்று தொடர்ந்து நடித்து அசத்தி வந்தார் விஜயகாந்த். பெரும்பாலும் கிராமத்து கதை களம் உள்ள படங்களையே நடித்தார் அந்த படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் ரஜினி, கமல், ராமராஜன் போன்ற நடிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து மாஸ் காட்டினார் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி நடை கண்டு வந்த கேப்டன் விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரது ஆரம்பகால அரசியல் விண்ணைத் தொட்டது என்று தான் சொல்லவேண்டும் எடுத்தவுடனேயே எம்எல்ஏ மற்றும் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு இடையில் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்தனர் ஒருவழியாக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளிவந்தது அதில் முற்றிலுமாக மாறி போய் இருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கண்கலங்கினார் எப்படி முரட்டுத்தனமாக உடலமைப்பை வைத்திருந்த விஜயகாந்த் இப்படி ஆகிவிட்டாரே கூறிய பலரும் கண்ணீர் வடித்தனர் ஆனால் தற்போது விஜயகாந்த உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறார்.

அதை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்கள் பிறந்தநாளையொட்டி ரஜினிகாந்த் மற்றும் அவரது இரு மகன்கள் வாழ்த்து தெரிவித்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள். விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வரும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.