தமிழ் இயக்குனர்களுக்கு குறி வைக்கும் “விஜய்தேவர் கொண்டா”..! என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்.!

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் விஜய் தேவர் கொண்டா. இவர் தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் முதல் படத்திலேயே விஜய் தேவர் கொண்டா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இந்த படத்தை தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது இருப்பினும் சிறப்பான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்ததால் ஒவ்வொரு படமும் வெற்றி படமாக மாறின.

அதிலும் குறிப்பாக டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் போன்ற படங்கள் இவருக்கு புகழை சேர்த்தன. இப்படி ஓடிக்கொண்டிருந்த விஜய் தேவர் கொண்டா தமிழ் பக்கமும் திசை திரும்பினார் தமிழில் நோட்டா  என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார் அதன்பிறகு தலை காட்டவில்லை. ஆனால் தெலுங்கில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் விஜய் தேவர் கொண்டா.

தற்போது பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் விஜய் தேவர் கொண்டா கையில் குஷி, லைகர் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக லைகர் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று விஜய் தேவர் கொண்டாவிடவும் ஏன் தமிழ் சினிமா பக்கம் நடிக்க வரவில்லை என கேட்டுள்ளனர் அதற்கு அவர் பதில் அளித்தது பா ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சலில் இணைய ஆசையாக இருக்கிறேன் இவர்கள் மூவரில் யார் எப்பொழுது கூப்பிட்டாலும் உடனே போய் நடிப்பேன் என கூறியுள்ளார் இச்செய்தி தற்போது நடிகர் விஜய்தேவர் கொண்டா  ரசிகர்களை சந்தோஷப்பட வைத்துள்ளது.

Leave a Comment

Exit mobile version