நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! பெண் யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நிலையில் இவர் ஒரு மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார்.

அதன் பிறகு விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் பெரும்பாலும் லேடி கெட்டப்பில் கலந்துக் கொண்டு வருகிறார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு சில திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற வள்ளி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இவ்வாறு இந்த சீரியலின் முடிவிற்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்த இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை அடுத்து சில குறும் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாஞ்சில் விஜய்யின் வீட்டில் விசேஷம் நடந்திருக்கும் நிலையில் அது குறித்த வீடியோக்கள் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நாஞ்சில் விஜய்க்கு நான் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

nanjil vijay
nanjil vijay

மேலும் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் அவரது உறவினர் எனவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு தனது விடாமுயற்சியினால் இந்த நிலமைக்கு வந்திருக்கும் நாஞ்சில் விஜயன் தொடர்ந்து ரசிகர்களை என்டர்டைமெண்ட் படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment