அதிரடி ஆக்ஷனில் வெளியானது ‘விஜயானந்த்’ பட ட்ரைலர்.!

பொதுவாக ஏராளமான பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாறு படத்தை தழுவி தற்பொழுது ‘விஜயானந்து’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இந்த ட்ரெய்லரை இன்று கர்நாடகா முதல் மந்திரி வல்சராய் பொம்மை கலந்து கொண்டு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தினை ட்ரங்க் படுத்தினை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் நிஹால் நடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஆனந்த் நாத்து, பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினையா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி.ரவிச்சந்திரன், அனீஸ் குருவில்லா, ரமேஷ் பட், தயால் பத்மநாபன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த படத்திற்கு கீர்த்தன் பூஜாரி ஒலிப்பதிவு செய்ய கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் தமிழ் பதிவு வசனங்களையும் பாடல்களையும் பாடல் ஆசிரியர் மதுரகவிஎழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு வி ஆர் எல் பிலிம் எனும் புரொடக்ஷன் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வரர் மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் தயாரித்து இருக்கிறார்.

இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது நிறைவடைந்து உள்ளது அந்த வகையில் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி இந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிடப்பட குழுவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக முடிந்த நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment