பிக்பாஸில் தவறவிட்ட காசை வட்டியும் முதலுமா.. சர்வைவர் நிகழ்ச்சியில் தட்டி தூக்கிய விஜயலட்சுமி – எவ்வளவு தெரியுமா.?

vijayalami-
vijayalami-

மீடியா உலகம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பதால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையும் அதற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே போய்க்கொண்டு இருக்கிறது அந்த வகையில் சின்னத்திரையில் எதிர்பார்க்காத புதிய புதிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்துக்கொள்ள நடிகர் அர்ஜுனை வைத்து சர்வைவர் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை ஜான்சிபர் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்களை இறக்கிவிட்டு சில போட்டிகளை வைத்து ஒளிபரப்பு செய்து வந்ததுதான் சர்வைர் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் இரண்டாக பிரித்து காடர்கள் வேடர்கள்  என இரு அணிகளாக பிரித்தனர். போட்டியை நாம் எதிர்பார்ப்பது சாதாரணமாக இல்லாத கடுமையாக இருந்ததால் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது மேலும் ஒவ்வொரு பிரபலமும் தனது திறமையை வெளிக்காட்டி தன்னை தக்க வைத்துக்கொள்ள அதிகமாக முயற்சித்தனர்.

எலிமினேஷன் செய்ய விரும்புவோருக்கு ஓட்டு போடுவார்கள் அதிக ஓட்டுகள் பெற்ற நபர் மூன்றாவது உலகத்திற்கு செல்வார்கள் அப்படி மூன்றாவது உலகத்திற்கு போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜயலட்சுமி. விஜயலட்சுமி உடன் சரண் மற்றும் வயனாகி ஆகியவர்கள் இறுதி போட்டியில் கலந்து கொண்டனர் இதில் அதிக ஓட்டுகளை வாங்கி விஜயலட்சுமி டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்று ஒரு கோடி ரூபாய் பரிசை தன்வசப்படுத்திக் கொண்டார்.

மேலும் விஜயலட்சுமி அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகிறார் விஜயலட்சுமி அப்பா ஒரு சினிமா இயக்குனர் இவரும் ஒரு சினிமா நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக விஜயலட்சுமி  பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆனால் இவர் அப்போ டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியாமல் வெளியேறினார்.