மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய விஜயகாந்தின் 10 சிறந்த திரைப்படங்கள்.!

நடிகர் விஜயகாந்த் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 10 திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

ரமணா:- ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ரமணா இந்த திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், சிம்ரன், ரவிச்சந்திரன், கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வானத்தைப்போல :- விக்ரமன் இயக்கிய குடும்ப பங்கான திரைப்படம் தான் வானத்தைப்போல இந்த திரைப்படம் 2000 ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் அவர்கள் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மீனா லிவிங் ஸ்டார் என பலரும் நடித்துள்ளனர்.

வானத்தைப்போல
வானத்தைப்போல

அம்மன் கோவில் கிழக்காலே:- விஜயகாந்த் மற்றும் ராதா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் அம்மன் கோயில் கிழக்காலே. இந்த திரைப்படம் 1986 ஆண்டு வெளியாகி உள்ளது மேலும் இந்த திரைப்படத்தை ஆர் சுந்தர்ராஜன் அவர்கள் இயக்கி உள்ளார்.

கேப்டன் பிரபாகரன்:- நடிகர் விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை ஆர் கே செல்வமணி அவர்கள் இயக்கியுள்ளார்.

கேப்டன் பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன்

பெரியண்ணா:- எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா,மீனா,  மானசா, மனோரமா, மணிவண்ணன், ஆனந்தராஜ், வையாபுரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் தான் பெரியண்ணா இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்காக விஜய் அவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறாவது நாள் :- 1984 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் தான் நூறாவது நாள், இந்த திரைப்படத்தை மணிவண்ணன் அவர்கள் இயக்கியுள்ளார், மேலும் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த்,  மோகன், நளினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் குறைந்த செலவில் வெறும் 12 நாட்களில் எடுக்கப்பட்டது.

நூறாவது நாள்
நூறாவது நாள்

சட்டம் ஒரு இருட்டறை:- விஜயகாந்த் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூட்டணியில் மூன்றாவது திரைப்படம் தான் சட்டம் ஒரு இருட்டறை. இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி, சங்கிலி முருகன் உள்ளிட்ட நடித்துள்ளனர்.

வைதேகி காத்திருந்தாள் :- 1984 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் இயற்றியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் ரேவதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சத்ரியன் :- 1990 ஆம் ஆண்டு மணிரத்தினம் தயாரிப்பில் கே சுபாஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பு விழா திரைப்படம் சத்ரியன் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பானுப்பிரியா,ரேவதி,திலகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சத்ரியன்
சத்ரியன்

சின்ன கவுண்டர் :- ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சின்ன கவுண்டர். இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படத்தை வேறு மொழிகளில்  ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் நூறு நாட்களுக்கும் மேலோடி சாதனை படைத்தது.

Leave a Comment