இன்று தொலைக்காட்சியில் போட்டாலும் டிஆர்பி எகிறும்.. மறக்க முடியாத விஜயகாந்தின் 10 திரைப்படங்கள்..

vijayakanth top 10 movies list : ரஜினி கமல் உச்ச நடிகர் ஆக இருந்த பொழுது தனக்கான இடத்தை தன்னுடைய விடா முயற்சியால் அடைந்தவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் இன்று சினிமாவில் இல்லை என்றாலும் விஜயகாந்த் போல் ஒரு நல்ல மனிதர் பார்க்கவே முடியாது என பல சினிமா பிரபலங்கள் பேட்டியில் கூறியுள்ளார்கள். வாரி வாரி வழங்கும் கொடை வள்ளல் எம்ஜிஆர்-க்கு பிறகு கருணை உள்ளம் கொண்டவர் இவர்தான் என பல சினிமா பிரபலங்கள் விஜயகாந்த்தை புகழ்ந்தது பேசி உள்ளார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக மரணமடைந்தார் இவரின் மரணம் சினிமா உலகினரை மட்டுமல்லாமல் சாமானிய மனிதர்களையும் பெரிதாக பாதித்தது. இந்த நிலையில் விஜயகாந்த் மண்ணை விட்டு மறைந்தாலும் ரசிகர்களின் மனதை விட்டு மறைய மாட்டார் அந்த வகையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்ட 10 திரைப்படங்களை இங்கே காணலாம்.

ரமணா :

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு விஜயகாந்த், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ரமணா. இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார். படத்தை ஆஸ்கார் வி ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஒரு ஆக்சன் அதிரடி திரைப்படமாக வெளியானது. அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

சின்ன கவுண்டர் :

1992 ஆம் ஆண்டு விஜயகாந்த், சுகன்யா ஆகியோர் நடிப்பில் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சின்ன கவுண்டர் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், சுகன்யா ஆகியோருடன் இணைந்து மனோரமா நடித்திருப்பார் இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்திருந்தார் மேலும் செந்தில், கவுண்டமணி, வடிவேலு ஆகியோர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். வடிவேலு இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு குடை பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்ரியன் :

1990 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி விஜயகாந்த், பானுப்பிரியா, ரேவதி, விஜயகுமார், திலகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சத்ரியன் இந்த திரைப்படத்தை கே சுபாஷ் என்பவர் இயக்கியிருந்தார் படத்தை மணிரத்தினம் எஸ் ஸ்ரீராம் ஆகியோர் தயாரித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம்.

வைதேகி காத்திருந்தாள் :

1984 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் வைதேகி காத்திருந்தாள் இந்த திரைப்படத்தை ஆர் சுந்தர்ராஜன் தான் இயக்கியிருந்தார் படத்தில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில், ராதாரவி, வடிவுக்கரசி, கோவை சரளா  ஆகியவர்கள் பணியாற்றினார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார் படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

சட்டம் ஒரு இருட்டறை :

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி, எஸ்ஏ சந்திரசேகர், சங்கிலி முருகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் சட்டம் ஒரு இருட்டறை இந்த திரைப்படம் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.

நூறாவது நாள் :

1984 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி மோகன், நளினி, விஜயகாந்த், சத்யராஜ், தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ், ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நூறாவது நாள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார் படத்தை மணிவண்ணன் அவர்கள் இயக்கியிருந்தார் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

பெரியண்ணா :

1999 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா சிவகுமார், மீனா, மனோரமா, ஆனந்தராஜ், மணிவண்ணன், வையாபுரி , ஆர் சுந்தர்ராஜன் வினு சக்கரவர்த்தி, அஜய் ரத்தினம் ஆகிய நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பெரியண்ணா இந்த திரைப்படத்திற்கு பரணி அவர்கள் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

கேப்டன் பிரபாகரன் : 

ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி விஜயகாந்த், சரத்குமார், எம் என் நம்பியார்,  ரூபினி, மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன், லிவிங் ஸ்டான், காந்திமதி, பொன்னம்பலம், ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அதேபோல் இந்த திரைப்படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.

அம்மன் கோவில் கிழக்காலே :

ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் அம்மன் கோயில் கிழக்காலே இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், ராதா, ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, செந்தில், ராதா ரவி, வினு சக்கரவர்த்தி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார்.

வானத்தைப்போல :

விக்ரமன் இயக்கத்தில் 2000 ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் வானத்தைப்போல இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், மீனா, லிவிங் ஸ்டாண், பிரபுதேவா, கௌசல்யா, தேவன், செந்தில், ரமேஷ் கண்ணா, ஆனந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது குடும்ப படமாக இருந்ததால் பல மக்கள் இந்த படத்தை கண்டு களித்தார்கள்.