விஜயகாந்தின் மரண மாஸ் பட டைட்டிலில் நடிக்கும் பிரபுதேவா.! டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

0
Prabhudeva
Prabhudeva

விஜயகாந்த்,கார்த்திக்,அருண்பாண்டியன்,சந்திரசேகர் ஜெய்சங்கர் நடிப்பில் 1986ஆம் ஆண்டு அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஊமைவிழிகள், இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று  ரசிகர்களை கவர்ந்தது. அப்பொழுது இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தின் தலைப்பை தான் தற்போது பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு வைத்துள்ளார்கள் படக்குழு, இந்த திரைப்படத்தை தனஞ்செழியன் எழுதி இயக்குகிறார். மாபிள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனஞ்ஜெயன் படத்தை தயாரிக்கிறார். காஸிப் இசை, விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் பென்னி ஒலிவர்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் படத்தின் ஹீரோயினாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார் மேலும் கண்ணில் பிரபுதேவா இருப்பது போல் போஸ்டர் வெளியாகி ரீச் ஆகி வருகிறது.

Prabhudeva
Prabhudeva