அட நம்ம கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் இத்தனை இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளாரா.! எந்தெந்த இயக்குனர் தெரியுமா.?

80-களில் முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் ஆவார். இவர் நடித்த காலகட்டத்தில் திரையுலகில் பிரபலமடைந்து கொடிகட்டி பறந்து வந்தார்.இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அரசியலின் மீது  அதிக அதிகாரம் ஆர்வம் வந்ததன் காரணமாக அரசியலில் குதித்து விட்டார் தற்போது அரசியல்வாதியாக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி வருகிறார்.

இந்தநிலையில் விஜயகாந்தை வைத்து எந்தெந்த இயக்குனர்கள் திரையுலகிற்கு அறிமுகமாகி உள்ளார்கள் என்ற லிஸ்டை தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,

சந்திரசேகர் – இயக்குனர் சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை இப்படம் 1981இல் திரையுலகிற்கு அறிமுகமானது.

அரவிந்த் ராஜ் – இயக்குனர் அரவிந்தராஜ் விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் ஊமை விழிகள் இத்திரைப்படம் 1986இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

கலைமணி – இயக்குனர் கலைமணி விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் தெற்கத்திகள்ளன் இத்திரைப்படம் 1988ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

செல்வமணி – இயக்குனர் செல்வமணி விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் புலன் விசாரணை இத்திரைப்படம் 1990இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது. இதனையடுத்து கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை 1991 இல் இயக்கியிருந்தார்.

சபாபதி – இயக்குனர் சபாபதி விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் பரதன் இத்திரைப்படம் 1992இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

A.r. ரமேஷ் – இயக்குனர் ரமேஷ் விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் தாயகம் இத்திரைப்படம் 1995இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

ரமேஷ் செல்வன் – இயக்குனர் ரமேஷ் செல்வன் விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் உளவுத்துறை இத்திரைப்படம் 1998ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

மகாராஜன் – இயக்குனர் மகாராஜன் விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் வல்லரசு இத்திரைப்படம் 2000ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

ஷாஜி கைலாஷ் – இயக்குனர் ஷாஜி கைலாஷ் விஜயகாந்தை வைத்து இயக்கிய முதல் திரைப்படம் வாஞ்சிநாதன் இத்திரைப்படம் 2001ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது.

அருண்பாண்டியன்- இயக்குனர் அருண்பாண்டியன் விஜயகாந்தை வைத்து எடுத்த முதல் திரைப்படம் தேவன் இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானது.

இத்தனை இயக்குனர்களை அறிமுகம் செய்த பெருமை விஜயகாந்தை சேரும்.

Leave a Comment