பட்டிக்காட்டு நடிகராக நடித்துவந்த விஜயகாந்தை ஸ்டைலிஷ் நடிகனாக மாற்றிய பிரபல நடிகை.! இவங்க சேர்ந்து நடித்த திரைப்படங்கள் மரண ஹிட்

vijayakanth changed by radika : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த், விஜயகாந்த் சினிமாவில் பல இயக்குனர்களையும் பல நடிகர்களையும் தூக்கி விட்டுள்ளார், இப்படி விஜயகாந்த் பல சினிமா பிரபலங்களுக்கு வழி காட்டியதால் தான் இன்றுவரை விஜயகாந்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 1979ஆம் ஆண்டு அகல்விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார், அதனைத் தொடர்ந்து தமிழில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார், 1991 ஆண்டு தன்னுடைய நூறாவது திரைப்படமாக கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தில் நடித்த வெற்றி கண்டார்.

1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜயகாந்த் இந்த தம்பதிகளுக்கு விசய  பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த் 1993ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள் அதனால் நடிகர் விஜயகாந்திற்க்கும் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது.

அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார். இப்படி அரசியலில் ஈடுபட்டு வரும் விஜயகாந்த் படத்தின் ஆரம்பத்தில் நடிக்கும் பொழுது பட்டிக்காட்டானாக தான் நடித்து வந்தார்.

பட்டிக்காட்டானாக நடித்துவந்த விஜயகாந்தை ஸ்டைலிஷ் நடிகராக மாற்றிய பெருமை நடிகை ராதிகாவுக்கு உண்டு, ராதிகா லண்டனில் படித்து ஆங்கிலத்தில் புலமை தேர்ந்தவர், அதுமட்டுமில்லாமல் எப்படி ஸ்டைலாக இருக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்திற்கு கற்றுக் கொடுத்தாராம், இதனை ராதிகாவுடன் இணைந்து  விஜயகாந்த் நடித்த படத்திற்கு முன்பு பின்பு என்று பிரித்து பார்த்தால் அதன் மாற்றம் உங்களுக்கே தெரியும்.

நடிகர் விஜயகாந்தின் சினிமா வெற்றிகளுக்கு ராதிகா பக்கபலமாக இருந்துள்ளார், இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த அனைத்து படங்களுமே செம ஹிட் அடித்தது, அப்படி இருக்கும் வகையில் ராதிகாவின் கணவர் சரத்குமாரை விஜயகாந்த் வில்லனாக முதன்முறையாக அறிமுகப்படுத்தினார், அதன் பிறகு ஐந்து திரைப்படங்களில் வில்லனாக நடித்த சரத்குமார் ஒரு திரைப்படத்தில் விஜயகாந்திற்கு நண்பனாக நடித்திருப்பார்.

அதன்பிறகு சரத்குமாரை நீங்கள் வில்லனாக நடித்தது வரை போதும் இனி ஹீரோவாக நடிக்கும் நேரம் வந்துடுச்சு என தட்டிக்கடுத்து வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளார் விஜயகாந்த், அதன்பிறகுதான் பேரும் புகழும் பெற்றவர் தான்  சரத்குமார்.

Leave a Comment