கேப்டன் கூப்பிட்டும் வரமறுத்த அஜித்.! கடைசியில் விஜயகாந்தை கண் கலங்க வைத்த AK.

0
vijayakanth-ajith
vijayakanth-ajith

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல பலருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் என கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு பல விஷயங்களை செய்து உள்ளார் அதில் ஒன்றைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றவுடன் சங்கத்தில் நிறைய கடன் இருந்தது அதை அடைக்க கேப்டன் விஜயகாந்த் நடிகர் நடிகைகளை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஒரு கட்டத்தில் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு நடிகர்களை அழைத்துக் கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தி மிகப் பெரிய தொகையை சம்பாதித்து கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்தார்.

மீதி இருக்கின்ற பணத்தை டெபாசிட் செய்து சங்கத்தை தலை தூக்கி  நிமிர வைத்தார். விஜயகாந்த் கூப்பிட்டால் நடிகர்கள் பட வாய்ப்பு இருந்தாலும் கூட அதை தூக்கி எறிந்து விட்டு வருவார்கள் ஆனால் கேப்டன் கூப்பிட்டு அஜித் மட்டும் செல்லாமல் இருந்தது அப்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டது அதாவது அஜித்துக்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை என கிசுகிசுக்கப்பட்டது.

மறுபக்கம் உண்மையில் அஜித் மீது கேப்டன் கோபத்தில் தான் இருந்துள்ளார் ஏனென்றால் தான் கூப்பிட்டு வரவில்லை என்ற ஒரு காரணம்தான் இதை உணர்ந்து கொண்ட அஜித் நேரடியாக கேப்டன் விஜயகாந்தை சந்தித்து தன்னால் வர முடியவில்லை எனக் கூறி அவரிடம் மிகப்பெரிய ஒரு தொகையை கொடுத்து உள்ளார் ஆனால் கேப்டன் விஜயகாந்த் கோபத்தில் அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டார்

பிறகு அஜித் தன்னால் வர முடியாத காரணத்தை விளக்கி கூறினார், பிறகு முதுகில் அடிபட்டு இருந்தது அதையும் காட்டி உள்ளார் அஜித். இதை பார்த்த கேப்டன் விஜயகாந்த் கண்கலங்கி  ஏன் இதை என்னிடம் முன்பே சொல்லவில்லை என கேட்டுக்கொண்டு உள்ளார். பிறகு அஜித் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டாராம் இதுதான் உண்மையில் நடந்தது அஜித்திற்கும் விஜயகாந்த்துகும் எந்த பிரச்சனையும் இல்லையாம்..