விஜயகாந்த் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இந்த திரைப்படம் விஜயகாந்த்திற்கு நூறாவது திரைப்படம். மறைந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ் ஆகியோர் நூறாவது திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.
ஆனால் விஜயகாந்த் அவர்களின் நூறாவது திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜயகாந்த் அவர்களை அன்புடன் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள் அந்த திரைப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். விஜயகாந்த் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையில் 150 க்கு மேற்பட்ட திரைப்படங்களை நடித்திருந்தார்.
அதேபோல் மற்ற நடிகர்களின் நூறாவது திரைப்படத்தை இங்கே காணலாம் எம்ஜிஆர் நூறாவது திரைப்படமான “ஒளி விளக்கு” பாக்ஸ் ஆபீஸ் தோல்வி அடைந்தது.
அதேபோல் சிவாஜி கணேசன் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அவரின் நூறாவது திரைப்படம் ‘நவராத்திரி’ இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் ஒன்பது வெவ்வேறு வேடங்களில் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடித்திருந்தாலும் அப்பொழுது காலகட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை ஆனால் அதன் பிறகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதேபோல் கமலஹாசனும் தசாவதாரத்தில் 10 வெவ்வேறு கதை பாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தார் வெளியான பொழுது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை என்றாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது வெளியீடுகளில் நன்றாகவே ஓடியது. அதேபோல் கமலின் நூறாவது திரைப்படம் 1981 இல் வெளியாகிய ராஜா பார்வை இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது.
ரஜினிகாந்தின் நூறாவது திரைப்படம் “ஸ்ரீ ராகவேந்திரா” இதில் ரஜினி ராகவேந்திரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 1985-ல் வெளியிடப்பட்டது தமிழக அரசின் திரைப்படத்திற்கு வரி குறைப்பு வழங்கியபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற முடியவில்லை.
பிரபு சிவாஜி கணேசனின் மகன் பிரபு 120 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருந்தார் நூறாவது திரைப்படமாக “ராஜகுமாரன்” திரைப்படம் ஆனால் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதேபோல் சத்யராஜ் தன்னுடைய நூறாவது திரைப்படமாக “வாத்தியார் வீட்டுப்பிள்ளை” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படமும் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வி அடைந்தது.