வேன் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட தளபதி விஜய் வைரலாகும் வீடியோ.!

0

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணையும் முதல் திரைப்படம் ஆகும். அதனால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன்  நடித்து வருகிறார், நெய்வேலியில் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதனால் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு நெய்வேலி பக்கம் கடல் போல் குவிந்து வருகிறார்கள்.

மூன்றாவது நாளாக படப்பிடிப்பு நடந்து வருகிறது ஆனாலும் ரசிகர்கள் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது, ரசிகர்கள் அனைவரும் தளபதி தளபதி என கோஷமிட்டு கத்தினார்கள் இந்த நிலையில் தன்னை காணவந்த ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் மேலே ஏறி கையை அசைத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் விஜய்.

இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.