பாபா படத்தில் நடிகர் ரஜினியுடன் விஜய்.! வைரலாகும் புகைப்படம்..

நடிகர் விஜய் மற்றும் ரஜினி இருவரும் பாபா படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம்  தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நடிகர் விஜய் மற்றும் ரஜினி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். மேலும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக இருந்து வருகிறார்.

மேலும் இவருடன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு தற்பொழுது வயதான காரணத்தினால் சுறுசுறுப்பாக இவருடைய திரைப்படங்கள் இல்லை என ரசிகர்கள் தொடர்ந்து கலவை விமர்சனத்தை தந்து வருகிறார்கள். இருந்தாலும் ரஜினி திரைப்படங்களில் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பாபா இந்த திரைப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்க ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தார்கள் அந்த வகையில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ஹிட் திரைப்படங்களில் பாபா படமும் ஒன்று. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாபா திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் ரஜினியை சந்தித்துள்ளார் அப்பொழுது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இவ்வாறு பல வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

vijay rajini
vijay rajini

தற்பொழுது வரையிலும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் ரஜினி இவருடைய நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாக கலவை விமர்சனத்தை பெற்றது இருந்தாலும் வசூல் ரீதியாக  நல்ல வசூல் வேட்டையை நடத்தியது. இந்நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Leave a Comment