பாலாவால் பல கோடி நஷ்டமான தயாரிப்பாளர் வி.ஏ.துரை.! இந்த நிலைமைக்கு அவர் தான் காரணம்..

0
bala
bala

தயாரிப்பாளர் வி.ஏ.துரை மருத்துவ செலவுக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் தொடர்ந்து பல திரைப் பிரபலங்கள் அவருக்கு உதவி செய்து வருகின்றனர். பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.துரை கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே தற்பொழுது சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாக வீடியோ வெளியிட சூர்யா, ரஜினிகாந்த் என அடுத்தடுத்து பலர் பண உதவியை செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பல சேனல்கள் துரை அவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் அவரும் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யா மருத்துவச் செலவுக்காக 2 லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில் இவரை தொடர்ந்து நடிகர் கருணாஸ் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி உள்ளார். மேலும் ரஜினிகாந்தும் பண உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியுடன் இணைந்த இவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள நிலையில் அப்பொழுது ரஜினிகாந்த் ரூபாய் 51 லட்சம் சம்பளமாக வழங்கினாராம் ஆனால் துறை அதனை சரியான முறையில் பயன்படுத்தாமல் இழந்து விட்டதாக கூறியிருந்தார்.

மேலும் தற்பொழுது ரஜினிகாந்த் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் உங்களுடைய மருத்துவச் செலவை தான் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பாலாவால் தான் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அதாவது பிதாமகன் படத்தினை பாலா இயக்கி இருந்த நிலையில் இந்தப் படத்தினை ஐந்து கோடியை வைத்து குறைவான பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய படத்தை 15 கோடி பொருட் செலவில் உருவாக்கியுள்ளார் இந்த படம் சூப்பர் ஹிட் பெற்றிருந்தாலும் கூட இவருக்கு அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.