நாளை ரசிகர்களை நேரில் சென்று சந்திக்கும் விஜய்.! எங்கு எப்போது தெரியுமா.?

0
vijay
vijay

நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் பிரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் அவர்கள் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில சிக்கல்கள் வருவதாக கூறப்படுகிறது. பொங்கல் தினத்தில் வாரிசு திரைப்படத்தை வெளியிடக் கூடாது எனவும் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் முதலில் வெளியிட வேண்டும் எனவும் கூறப்படுகிறது இதனால் வாரிசு வெளியீடு குறித்து சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் நாளை ரசிகர்களை நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மன்ற கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, மாநில மாவட்ட நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் வாரிசு படத்தை பொங்கலில் வெளியிடலாமா என்றும் இதுகுறித்து ஆலோசனை நடத்த நடிகர் விஜய் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள  அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த செயற்குழு கூட்டத்திற்கு நேரடியாக விஜய் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது. அனைவரும் கலந்து பேசிக்கொண்டு விரைவில் வாரிசு படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.