இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை “தளபதி 68” படத்தில் வாங்கும் விஜய்..! அதிர்ச்சியில் தமிழ் சினிமா..

0
vijay 68
vijay 68

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மேலும் இதில் விஜய் மிகப் பெரிய ஒரு கோடீஸ்வரனாக நடித்திருக்கிறார். வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் அதற்கான பூஜை ஏற்கனவே போடப்பட்ட நிலையில் ஷூட்டிங்கும் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தளபதி 68 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள..ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அட்லீ உடன் தான் இணைய இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது.  ஏனென்றால் ஆண்மையில் அட்லீ, பிரியா வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கூட விஜய் போய் வந்தார்.

இதனால் தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவது உறுதியாக கூறி வருகின்றனர். மேலும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. தளபதி 68 படத்திற்காக இயக்குனர் அட்லீ 50 கோடி சம்பளமாக உள்ளார் எனவும் செய்திகள் பரவிய வண்ணமே இருக்கின்றன.

இவருக்கே இப்படி என்றால் தளபதி 68 படத்திற்காக விஜய் எவ்வளவு கேப்பார் என பலரும் கேள்வி கேட்டு வந்த நிலையில் அதற்கும் பதில் வந்துள்ளது. தளபதி 68 படத்திற்காக விஜய் சுமார் 150 கோடி சம்பளம் வாங்குவார் என ஒரு தகவல் இணையதள பக்கத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்து இன்னும் படக்குழு சைடுல இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.