அஜித்துடன் சேர்ந்து நடிக்கவிருந்த விஜய்.. நடுவில் வந்து குட்டையை குழப்பிய விக்ரம்.. 26 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்

சினிமா உலகில் நடிகர்கள் போட்டி போட்டு கொள்வது போட்டிகள்  ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டி போடும் நடிகர்களே ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். அந்த வகையில் சிவாஜி – எம்ஜிஆர், ரஜினி – கமல் தொடர்ந்து அஜித்து விஜய்யும் சேர்ந்து நடித்து வெற்றிகளை கண்டுள்ளனர்.

முதலில் ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் அஜித் விஜய் இணைந்து நடித்து அசத்தினர் அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க இருந்தனர் சில காரணங்களால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகினார் அதன் பிறகு பல இயக்குனர்கள் அஜித் விஜய் வைத்து படம் பண்ண ஆசைப்பட்டாலும் அது நடக்கவே இல்லை.

இன்றைய நாட்களிலும் அது நடக்குமாய் என்றால் கேள்விக்குறி தான் ஏனென்றால் இப்பொழுது இருவருமே நம்பர் ஒன் இடத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர் இதனால் இப்பொழுது நடக்க சாத்தியமில்லை என கூறப்படுகிறது ஆனால் 26 வருடங்களுக்கு முன்பு அஜித் விஜய் வைத்து படம் பண்ண இயக்குனர்கள் திட்டம் போட்டுள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1997 ஆம் ஆண்டு ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் உல்லாசம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காதல் நிறைந்த ஒரு படமாக உருவாகி இருந்தது படத்தில் அஜித், விக்ரம், மகேஸ்வரி, ரகுவரன் என பலர் நடித்து அசத்தியிருந்தனர். படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று சுமாராக ஓடியது இந்த திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது..

ஜே.டி மற்றும் ஜெர்ரி சமிபத்தில் பேட்டியில் சொன்னது : உல்லாசம் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்த பொழுது சில நண்பர்கள் அஜித் மற்றும் விஜய் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள் காரணம் அப்போதுதான் அவர்களுக்கிடையே போட்டி ஆரம்பித்தது அந்த சமயத்தில் என்னுடைய கல்லூரி நண்பர் ஆன விக்ரம் சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார். அதனால் நாங்கள் விக்ரமை நடிக்க வைத்தோம் என கூறினார் பிறகு அஜித்தும், விக்ரமும் சேர்ந்து நடித்தனர். ஒருவேளை அஜித்தும், விஜயும் உல்லாசம் படத்தில் நடித்திருந்தால்  இன்று வரலாற்றில் இடம் பிடித்திருப்பது இன்று வரையிலும் பேசப்பட்டு இருக்கும் என ரசிகர்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment