புகைப்படங்களை பாதுகாத்து வைத்திருக்கும் விஜய்.! அதுவும் யாருடன் எடுத்தது தெரியுமா.?

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை என்பதால் விஜய் தற்பொழுது தனது அடுத்த திரைப்படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். ஆம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியிடப்பட இருக்கிறது என தகவலும் கசிந்துள்ளது மேலும் விஜயின் 67வது திரைப்படம் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் நடிக்கப் போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் விஜய் பற்றி ஒரு ரகசிய தகவல் இணையத்தில் புகைப்படத்துடன் உலா வருகிறது ஆம் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசிய பழைய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது பரவி வருகிறது அதில் விஜய் தனக்கு பிடித்த போட்டோவை பற்றி கூறியுள்ளார்.

அதில் சாலிகிராமத்தில் உள்ள விஜயின் அப்பா வீட்டில் ரஜினி நடித்த பணக்காரன் திரைப்படத்தின் சூட்டிங் போது விஜய் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் நான் சிகப்பு மனிதன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிலும் ரஜினியுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் விஜய் பத்திரமாக வைத்துள்ளார்.

இதுதான் தற்பொழுது இவரது ரசிகர்கள் மத்தியில் தீயாக வைரலாகி வருகிறது.மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ காணொளியை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment