தியேட்டரில் புது படம் பார்த்த “விஜய்” கூட யார் யார் இருந்தாங்க தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

Vijay
Vijay

Vijay : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடுகிறார் அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஆக்சன் பேக் படமாக உருவாகியுள்ளது நிச்சயம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. லியோ படத்தை முடித்த கையோடு தளபதி 68 படத்திற்கு ரெடியாகிவிட்டார் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கு முன்பாக நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறது.

படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அதில் வயதான கதாபாத்திரத்திற்கு ஜோதிகா அல்லது சிம்ரன் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றொரு விஜய்க்கு பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த  படம் இது முழுக்க முழுக்க ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் எனவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இந்த படத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகிய நிலையில் அதன்படி நேற்று அந்த தொழில்நுட்பத்தில் விஜய் இருக்கும் புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டு இருந்தார் அதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி..

ஆகிய  மூவரும் தியேட்டருக்கு சென்று ஒரு படத்தை பார்த்து உள்ளனர் அந்த படம் வேறு எதுவும் அல்ல.. Denzel washington நடிப்பில் உருவாகி உள்ள  the equalizer 3 படத்தை   பார்த்துள்ளனர். நேற்று வெளிவந்த இந்த படத்தை முதல் நாள் முதல் ஷோ போய் பார்த்துள்ளார் விஜய் படத்தை ரசித்து பார்த்து கொண்டாடினார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.