லோகேஷ் நாகராஜ் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து விஜயின் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது இந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் படமாக்கப்பட்ட அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஒட்டுமொத்த பட குழுவும் காஷ்மீர் சென்றது. 500க்கும் மேற்பட்ட பட குழுவினர்கள் லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்றார்கள்.
தனி விமானத்தில் மகிழ்ச்சியுடன் காஷ்மீருக்கு சென்ற பட குழுவினர் காஷ்மீரில் இறங்கியதும் கடும் குளிரின் சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே படம் பிடிப்பு நடைபெற்றது அது மட்டும் இல்லாமல் கடும் குளிரின் காரணமாக கேமராவில் நினைத்தது போல் காட்சிகள் படமாக்க முடியவில்லை என்பதால் அதிகாலையில் பணி விலகும் வரை காத்திருந்து தாமதமாக தான் படபிடிப்பு நடத்தப்பட்டது.
லியோ திரைப்படத்தில் முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் காட்சிகள் படமாக்கப்பட்டதை தொடர்ந்து ஆளை விட்டால் போதும் என அங்கிருந்து சென்னை திரும்பினார்கள் ஆனால் நடிகர் விஜய்யின் காட்சிகள் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து படமாக்கப்பட்டு வந்தது அவ்வளவு குளிரிற்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு விஜய் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் இந்த நிலையில் லோகேஷ் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் முடித்துவிட்டு அடுத்ததாக 10 நாட்கள் தொடர்ந்து சென்னையில் படபிடிப்பை நடத்த திட்டமிட்டார்.
சென்னையில் படபிடிப்பு முடித்துவிட்டு அடுத்ததாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 20 நாட்கள் படப்பை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வந்தார் இந்த நிலையில் காஷ்மீரில் படபிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய் லோகேஷ் கனகராஜ் அவர்களை அழைத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த ஆலோசனை நடத்தினார் அப்பொழுது ஏற்கனவே காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பில் படக் குழுவினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள் அந்த வகையில் மீண்டும் ஒரு அவுட்டோர் சூட்டிங் வேண்டாம் முடிந்தளவு சென்னையிலேயே மீதமுள்ள காட்சிகளை எடுத்து விடலாம்.
ஹைதராபாத்திற்கு சென்று படமாக்கப்படும் காட்சிகள் அனைத்தையும் சென்னையிலேயே செட் அமைத்து படப்பிடிப்பை முடித்து விடலாம் என கூறியுள்ளார் இதனால் ஆர்டிஸ்டிகளுக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்படது எனவும் லோகேஷ் கனகராஜ் இடம் தெரிவித்துள்ளார். சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் சென்னையில் உள்ள தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் எனவும் விஜய் தெரிவித்துள்ளார், அதனால் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதற்கு யோசித்து வந்துள்ளார் இந்த நிலையில் பிரசாந்த் ஸ்டுடியோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் தினமும் பிரசாந்த் ஸ்டூடியோ வெளியில் விஜய் வரும்வரை காத்திருந்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் கார்கள் செல்லும் பொழுது விஜயின் காரை தட்டுவதும் அவரைப் பின் தொடர்ந்து பைக்கில் ஆபத்தான முறையில் செல்வதும் மிகவும் தொந்தரவாக இருந்து வருகிறது உடனே லோகேஷ் கனகராஜ் விஜய்யை சந்தித்து தற்பொழுது ஸ்டுடியோ உள்ளே படமாக்கப்படுவதால் உங்களுடைய ரசிகர்களால் மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாக வேண்டியது இருக்கிறது இதனால் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நடத்தினால் உங்கள் ரசிகர்களின் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் அதனால் இனி சென்னையில் படபிடிப்பை நடத்த முடியாது ஹைதராபாத்தில் படபிடிப்பை வைத்துக் கொள்வோம் என விஜய் இடம் கூறியுள்ளார்.
வேறு வழியில்லாமல் விஜயும் ஹைதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்தலாம் என தெரிவித்துவிட்டார் இந்த நிலையில் விஜய் ரசிகர்களின் அன்பு தொல்லையால் தான் சென்னையில் நடக்க வேண்டிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. சென்னையில் உள்ள சினிமா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பரிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.