தல அஜித் நடித்த இந்த திரைபடத்தில் நடிக்க விஜய்க்கு ரொம்ப ஆசையாம்.! அவரே கூறிய தகவல்.

0

தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நடிகர்களாக கொடிகட்டி பறப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜீத் தான். அதுமட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படமும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படமும் திரை உலகிற்கு வர உள்ளது என்பதால் ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து ஆவலாக காத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது எல்லாம் டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தங்களது க்யூட்டான புகைப்படங்களையும் வீட்டில் நடக்கும் விஷயங்களையும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

எனவே ரசிகர்களுக்கும் பொழுது போக்கும் வகையில் அவரவர் அவருக்கு பிடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றிய கமெண்ட் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தல அஜித் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படத்தில் அர்ஜுன் ரோலில் நடிக்க என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடிப்பு இருப்பேன் என்று விஜய் வெங்கட் பிரபுவிடம் கூறினாராம்.