நண்பன் 2 படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்..! இயக்குனர் ஷங்கர் கொடுத்த பதிலைக் கண்டு தெறித்து ஓடிய நடிகர்கள்.

0
vijay
vijay

சினிமா உலகில் ஒரு படம் ஹீட் அடித்து விட்டால் அதை பிற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம் அந்த வகையில் தமிழில் கூட பல ஹிந்தி படங்கள் ரீமேக்காகி உள்ளன அதில் ஒன்றாக ஹிந்தியில் நடிகர் அமீர்கான் மாதவன் போன்றோர் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் என்ற திரைப்படம் ..

பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் நண்பன் என்ற பெயரில் இயக்குனர்  ஷங்கர் இயக்கினார். அந்த படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா போன்றவர்கள் ஹீரோக்களாக நடித்தனர் இவர்களுடன் இணைந்து சத்யன், இலியானா, சத்யராஜ், எஸ் ஜே சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விஜய் ஸ்ரீகாந்த் ஜீவா மூவருக்குமே நல்ல நெருக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறி இருந்தனர்.

இந்த சமயத்தில் மூவருமே நண்பன் இரண்டாவது பாகம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து.. இயக்குனர் ஷங்கரிடம் போய் கேட்டுள்ளனர். அதுவும் இவர்களே நண்பன் இரண்டாவது பாகம் சிந்தகி நா மிலேகி தோபரா என்ற படத்தை ரீமேக்ஸ் செய்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளனர்.

இயக்குனர் சங்கர் அந்த படத்தை ஏற்கனவே பார்த்திருப்பார் போல அந்த படத்தின் ஒரு காட்சியில் வானத்திலிருந்து இறங்குவது போல  ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும் அதை நீங்கள் பண்ணுகிறீர்களா என கேட்டுள்ளார் இதற்கு அந்த மூவரும் பதிலளிக்காமல் சைலண்டாக அந்த இடத்தை காலி செய்தனர். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஸ்ரீகாந்த் வெளிப்படையாக கூறியுள்ளார்.