டெல்லி வீதிகளில் சாந்தனு, லோகேஷ் உடன் கூலாக நடந்துப்போன விஜய்..! இதோ புகைப்படம்.

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் வரிசையில் சேர்கின்றன அந்த வகையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு.

இந்த படம் அவருக்கு 66-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி சிறப்பாக எடுத்து வருகிறார் தில் ராஜூ தயாரித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்தின் இரண்டு கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு படமாக உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இளம் நடிகரான சாந்தனு..

தனது சமூக வலைதள பக்கத்தில் லோகேஷ் மற்றும் விஜயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சில தகவலை கூறியுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளது என்னவென்றால் மாஸ்டர் படத்தின் சூட்டிங் டெல்லியில் நடந்தது அப்பொழுது நானும் லோகேஷ் மற்றும் விஜய் அண்ணா ஆகியோர்கள் இணைந்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு..

பின்பு டெல்லியில் உள்ள ஒரு தெருவில் நடந்து போனோம் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறி உள்ளார்.. இந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தற்போது லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர்.

vijay-
vijay-

Leave a Comment