வடிவேலு பட ஆடியோ லான்ச்சுக்கு விசிட் அடித்த “விஜய்”.. கட்டிப்பிடித்து கதறி அழுத பிரபலம் – கடைசியில் நடந்த பெரிய சோகம்

தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்த பல நடிகர்கள் புதுமுக மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் தம்பி ராமையா இயக்கத்தில் உருவான இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தை மாணிக்கம் நாராயணன் என்பவர் தயாரித்திருந்தார்.

படம் ரெடியான பிறகு போட்டு பார்த்து உள்ளார் அப்பதான் அவருக்கு  பிரச்சனையே வந்து விட்டதாம் அந்த அளவிற்கு மிக மோசமான கதை மற்றும் படத்தில் பெரிய அளவு காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லையாம். இதனை அடுத்து நகைச்சுவை காட்சிகளை தனியாக எடுத்து இணைத்து விடலாம் என படக்குழு திட்டம் போட்டது ஆனால் வடிவேலு அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை..

வேறு வழி இல்லாமல் படத்தை வெளியிட முடிவு செய்தது அதற்காக ஆடியோ லான்ச் விழா ஒன்றை நடத்தி அதில் பல பிரபலங்களை அழைத்து படத்தை  பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து படம் வெற்றி பெறும் என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நினைத்தாராம் அதன்படி விஜய், சூர்யாவை ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அழைக்கலாம் என மாணிக்கம் நினைத்தார்.

விஜய்க்கு தொடர்பு கொண்டு நீங்களும், சூர்யாவும் வந்து ஆடியோவை வெளியிட்டால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என கூறி இருக்கிறார். இதற்கு விஜயும் வருகிறேன் என கூறியிருக்கிறார்.  பிறகு சூர்யாவிடம்  விஜய் வருவதாக கூறிவிட்டார் நீங்களும் வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என கூறி இருக்கிறார் அதற்கு சூர்யாவும் ஓகே சொல்ல ரொம்ப சந்தோஷமாகிவிட்டார்.

திடீரென விஜய் என்னை மன்னித்து விடுங்கள் என்னால் வர முடியாது என கூறி இருக்கிறாராம் அதன் பின் சிம்புவை தொடர்பு கொண்டு நீங்கள் வரவேண்டும் என கேட்டு இருக்கிறார் அவரும் ஓகே சொல்லி இருக்கிறார் பின் இசை வெளியீட்டு சூர்யா, சிம்பு போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் திடீரென விஜய் போன் செய்து அரை மணி நேரத்தில் வந்துவிடுகிறேன் என சொல்லி இருக்கிறார்.

இதனால் மாணிக்கம் நாராயணனுக்கு அங்கு என்ன செய்வது என்று புரியவில்லையாம். அதுபோலவே அவர் வந்தார் இதை பார்த்த மாணிக்கம் நாராயணம் கட்டியணைத்து அழ ஆரம்பித்துவிட்டாராம் உடனே விஜய் நான் தான் வந்து விட்டேன் ஏன் அழுகிறீர்கள்  எனக் கூறியிருக்கிறார். ஆடியோ லான்ச் அவர் நினைத்தபடி வெற்றியாக நடந்து முடிந்தாலும்.. இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் வெளிவந்து படுதோல்வி அடைந்தது.

Leave a Comment