மகேஷ்பாபுவின் சவாலை தவுடுபோடியாக்கிய தளபதி விஜய் வைரலாகும் புகைப்படம்.!

Vijay viral photo to challenge Maheshbabu : சரவணா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர் நடிகைகள் அவ்வப்போது வீடு சுத்தம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, நடிப்பது போன்ற வீடியோக்களை பதிவிட்டு மற்ற நடிகர்களுக்கு சேலஞ்ச் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகரான நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளுக்கு நடிகர்-நடிகைகள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அவர் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றியை தெரிவித்திருந்தார். மேலும் இவர் தனது பிறந்தநாள் அன்று மரக்கன்றை நட்டு இதைவிட சிறப்பாக எதுவும் செய்திட முடியாது என பதிவிட்டு இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்றோருக்கு மரக்கன்று நடும்மாறு சேலஞ்ச் விட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த கிரீன் இந்தியா சேலஞ்ச் இவர்களுடன் முடிவு பெறாமல் சங்கிலி தொடராக தொடரட்டும்  எனவும் கேட்டிருந்தார்.

நடிகர் விஜய் இவரின் சேலஞ்ஜை ஏற்று தற்போது அவரது வீட்டில் மரக்கன்றை நட்டு  உள்ளார்.  அந்த புகைப்படத்தை நடிகர் விஜய் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

green india vijay
green india vijay
vijay green india
vijay green india
vijay green india
vijay green india

Leave a Comment