முக்கிய இடத்தில் அதிக திரையரங்குகளை கைப்பற்றிய விஜயின் வாரிசு – தளபதி கேரியரிலேயே இதுதான் முதல்முறை..

0
vijay-
vijay-

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர் பீஸ்ட் பழத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இப்பொழுது கூட தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 66வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றி பெறமாக நடித்து முடித்துள்ளார்.

வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த படத்தில் விஜய் மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரனாக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர்ந்து இழுக்க பரிசுப்பட போகுது அப்டேட்களை கொடுத்து வருகிறது ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல், பர்ஸ்ட், செகண்ட் லுக் போஸ்டர், தீ தளபதி பாடல் போன்ற அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன. வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆகிறது இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீசுக்கு முன்பாக திரையரங்குகளை கைப்பற்ற இரண்டு பட குழுவும் போட்டி போட்டு வேலை செய்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் முக்கிய இடத்தில் அதிக திரையரங்குகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறது விஜயின் வாரிசு.. அது வேறு எங்கும் அல்ல..

USA – வில் 600 க்கு அதிகமான லொகேஷன்களில்  ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே முதல்முறையாக இந்த திரைப்படத்திம் தான்  அங்கு அதிகம் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். இதனால் வாரிசு படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது. இந்த செய்தி தற்போது தளபதி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.