பிகில் படம் பற்றி விஜய் போட்ட ஒரே ஒரு டுவிட் குவியும் லைக்ஸ்

0
bigil
bigil

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில்  இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது, படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல் விஜய் படம் என்றாலே ரிலீசுக்கு முன்பு பரபரப்பாக பேசப்படும் அந்த வகையில் இந்த திரைப்படமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, ரிலீசுக்கு பிறகு இந்தத் திரைப்படத்தை பற்றி எப்படி பேசுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே ட்விட்டரில் எமோஜி இடம்பெறும் ஆனால் இந்த பிகில் திரைப்படத்திற்கு அப்படி எதுவும் இல்லை என ரசிகர்கள் வருந்தினார்கள்.

இந்தநிலையில் பிகில் திரைப்படத்திற்கு தற்போது ஏமோஜி வந்துள்ளது இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் இந்தநிலையில் தளபதி விஜய் தனது ட்விட்டரில் பிகில் என டுவிட் செய்துள்ளார், இதற்கு பல ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி போட்டு வருகிறார்கள்.