பாரதிகண்ணம்மாவை தொடர்ந்து முடிவுக்கு வர இருக்கும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் படத்தை போல் இவர்கள் சீரியலை ஒளிபரப்பி வருவதால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த மௌனராகம் சீரியல் முதல் சீசன் முடிவடைந்தது தற்பொழுது இரண்டாவது சீசன் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த மௌன ராகம் இரண்டாவது சீசன் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சின்னத்திரையில் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்பட்டு வருகிறது அந்த வகையில் மனம் கவர்ந்த சீரியலாக மௌன ராகம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருந்தது அதனால் இதன் இரண்டாவது பாகத்தை இயக்குனர் எடுத்தார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது சீசன் ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த சீரியலில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களிடைய பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்கள். அதனால் ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பிப் பார்த்தார்கள் இந்த நிலையில் சீரியலில்  வருண் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் சக்தி கதாபாத்திரத்தில் நடிகை ரவீனா நடித்து வந்தார்.

இந்நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது வருண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சல்மான் மலையாளத்தில் ஒரு சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து ஜி கேரளம் சேனலில் அவர் புது படத்தில் கமிட்டாகி இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளது அதனால் மௌனராகம் சீரியல் 2 விரைவில் முடிவுக்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்த சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் ஏனென்றால் இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர இருப்பதை சமீபத்தில் நாம் அனைவரும் பார்த்தோம் இந்த நிலையில் மௌனராகம் சீரியல் முடிவுக்கு வர இருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Comment