TRP -ல் அடி வாங்கபோகும் விஜய் டிவி..? முக்கிய சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம்.? சோகத்தில் ரசிகர்கள்.

விஜய் டிவியில் தொடர்ந்து மக்களின் மனம் கவர்ந்து டி ஆர் பி யிலும் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி சீசன் 2. இதில் ஆரம்பத்தில் ஹீரோ ஹீரோயின் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஆலியா மானசா நடித்து வந்தனர். அப்போது சீரியல் தொடர்ந்து நல்ல ரேட்டிங்கை பெற்று வந்தது.

பின்பு ஒரு கட்டத்தில் ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் பிரசவத்திற்காக அவர் இந்த சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதில் அடுத்ததாக ரியா என்ற பிரபலம் நடித்து வருகிறார். ராஜா ராணி சீசன் 2 வில் ஹீரோயினுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வில்லி கதாபாத்திரத்தில் அர்ச்சனா என்பவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தார்.

இவருக்கும் இந்த சீரியல் மூலம் பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன. ஆனால் அண்மையில் ராஜா ராணி சீரியலை விட்டு அர்ச்சனாவும் எதிர்பாராத விதமாக வெளியேறி விட்டார். இவரது வெளியேற்றத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் ஆலியா இந்த சீரியலை விட்டு சென்ற பிறகு அர்ச்சனாவின் நடிப்புதான் மக்கள் பலரையும் எட்டர்டைன்மென்ட் செய்து வந்தது.

இந்த நிலையில் அர்ச்சனாவிற்கு  பதில் தற்போது அர்ச்சனா குமார் என்ற சீரியல் நடிகை நடித்து வருகிறார் மேலும் நடிகர் சித்துவும் இந்த சீரியலை விட்டு விலகுவதாகவும் கூறப்படுகிறது ஏனென்றால் அவருக்கு தற்போது சில திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம்.

அதனால் சின்ன திரையை விட்டு விலக அதிக வாய்ப்பு இருக்கிறது போல் தெரிய வருகிறது. இதுபோக ராஜா ராணி சீசன் 2 தொடரையே நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சின்னத்திரை வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Leave a Comment