கடந்தாண்டு தடைசெய்யப்பட்ட டிக் டாக் செயலி மூலம் பல நடிகர்,நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள். அந்தவகையில் நடிகைகளில் அபர்ணா தாஸ், கெப்ரில்லா இவர்களைத் தொடர்ந்து மிருணாளினி ரவி இவர்கள் மூவரும் தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார்கள்.
பொதுவாக நடிகர்களை விட நடிகைகள் தான் அதிக அளவில் டிக் டாக் மூலம் சினிமாவில் பிரபலம் அடைந்துள்ளார்கள். இதற்குக் காரணம் இவர்களின் அழகைப்பார்த்து ரசிகர்கள் இவர்கள் போடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு லைக்குகளை போட்டுவிடுகிறார்கள்.
இதனால் டிக் டாக் பிரபலங்களுக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் கிடைத்த விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது மிருணாளினி இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா, பகத் பாசில் போன்ற பிரபல முன்னணிகள் இணைந்து நடித்திருந்த திரைப்படம் டீலக்ஸ் இந்த திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக மிருணாளினி வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.
இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது சசிகுமார் மற்றும் சமுத்திரகனி நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் ரிலீஸ்சாக உள்ளது.
இத்திரைப்படத்தில் மிர்னாளினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக பொன்ராம் இயக்கும் அனைத்து படங்களிலும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற காமெடி திரைப்படங்களை பொன்ராம் தான் இயக்கி இருந்தார். அந்த வகையில் எம்ஜிஆர் மகன் திரைப்படம் காமெடி நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் மிருணாளினியை கடந்த நான்கு வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேட்டு வருகிறார்களாம். ஆனால் மிருணாளினி இதுவரையிலும் கலந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மிருணாளினிடம் கேட்கும் பொழுது நான் பார்வையாளராக மட்டுமே இருந்து இந்நிகழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பெரிதாக ஆர்வம் இல்லை என்று கூறிவிட்டாராம். இதனை அறிந்த ரசிகர்களும் அங்க போனேனா உன்னையும் அழ வைப்பாங்க நீ போகாத தங்கமே என்று கூறி வருகிறார்களாம்.
ஆனால் மிருணாளினி நெருங்கியுள்ள வட்டாரங்கள் பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொள்வார் என்று கூறுகிறார்கள். இது ஒரு புறமிருக்க பிக்பாஸ் சீசன் 4 அதாவது நான்காண்டுகளாக கமலஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ஆனால் சீசன் 5 வேறொரு முன்னணி நடிகர் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.