கேரள புடவையில் புகைப்படத்தை வெளியிட்டு ஓணம் வாழ்த்து கூறிய தொகுப்பாளினி ரம்யா.! லைக்ஸ் அள்ளுதே

0
ramya subramaniyan
ramya subramaniyan

சினிமா நடிகைகளுக்கு இணையாக டிவி நடிகை மற்றும் தொகுப்பாளினிகளுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள், அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர் ரம்யா.

இவரின் நிகழ்ச்சியை காண ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் ஆகிய திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் ரம்யாவுக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்று விட்டார், 2014ஆம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார். தற்போது மீண்டும் தனது தொகுப்பாளினி பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

ramya subramaniyan
ramya subramaniyan

இவர் கடைசியாக அமலா பால் ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார், அந்த திரைப்படத்தில் அமலாபாலுக்கு தோழியாக நடித்திருந்தார், மேலும் அதில் சில சர்ச்சை காட்சிகளும் இருந்தது. எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகை படத்தை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் கேரளா புடவையில் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ramya subramaniyan
ramya subramaniyan