இளம் பெண்களுக்கு நடுவில் ஜாலியாக கடற்கரையில் குஜாலா பண்ணும் விஜே ரக்சன்.! யார் யார் இருக்காங்க பாருங்க..

சின்னத்திரை ஹீரோ, ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அப்படி தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளர்களான பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்சன் மூவரும் தான் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கான தொகுப்பாளர்களாக இருந்து வருகிறார்.

மிகவும் ஜாலியாகவும் கலாட்டாவாக நிகழ்ச்சியை கொண்டு செல்வதில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதிலும் அதிக ஆர்வம் உடையவர்கள். இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அப்படி தற்பொழுது விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் இளம்பெண்கள் உடன் இலங்கை கடற்கரையில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரக்சன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் அதன் பிறகு தற்போது இவர் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் விருது வழங்கும் விழா, இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

vj rakshan
vj rakshan

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்து மிரட்டு இருந்தார். இதனை அடுத்து தற்பொழுது இவர் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற படத்தில் பள்ளி மாணவனாக நடித்து வருகிறார்.

vj rakshan 1
vj rakshan 1

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் அவர் இளம் பெண்களுடன் இலங்கை கடற்கரையில் இருக்கும் புகைப்படங்கள் நீச்சல் குளத்தில் பெண்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைதளத்தில் பதிவிட அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

vj rakshan
vj rakshan
vj rakshan 3
vj rakshan 3

Leave a Comment