சிம்ரன் போல் மிகவும் ஸ்லிம்மாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த பிரியங்கா.!

தனது பேச்சுத் திறமையினால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து சின்னத்திரையின் மூலம் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்து பிரபலமடைந்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் விஜய் டிவியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அந்த வகையில் இலங்கை, கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் பிரியங்காவின் இன்ஸ்டாகிராமில் “உங்கள் ஆங்கரிங் சூப்பர் பிரியூ” என்ற கருத்துகளை பதிவிட்டு இருந்தார்கள்.

விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக பல வருடங்களாக விஜய் டிவியில் பணியாற்றி வந்து செல்லப்பிள்ளை என்ற பெயரை எடுத்த டிடி-க்கு பிறகு சிறந்த பெண் தொகுப்பாளராக பிரியங்கா விளங்குகிறார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு சிறந்த பெண் தொகுப்பாளர் என விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் நெட்டிசன்கள் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை உருவானது.  பிரியங்காவிற்கும் தாமரைச் செல்வி இடையே நடந்த சில விஷயங்களால் நெட்டிசன்ககள் பிரியங்காவின் மீது கொஞ்சம் கோபத்தில் இருந்து வந்தார்கள்.

பிறகு தற்பொழுது இவர் அங்ரிங் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் பாவனியும் சென்றிருந்தார் . போன உடனே பிக்பாஸை பெருசு என்று கலாய்த்து தள்ளினார். இப்படிப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் மிகவும் ஸ்லிம்மாக மாறி அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

priyanga vj
priyanga vj

Leave a Comment