மணிமேகலை வீட்டில் நடந்த மிகப்பெரிய திருட்டு.! விசாரணையில் போலீசார்கள்.!

மிக அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவர்தான் மணிமேகலை. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளில் கோமாளியாக பங்கேற்றார், இரண்டு சீசனும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் சீசன் 3யிலும் மணிமேகலை உள்ளார்.

ஹூசைன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்ட இவர்,இன்ஸ்டாகிராமில் பல லட்ச ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். மணிமேகலை தனது கணவனுடன் இணைந்து முதல் கொரோனா லாக்டவுனில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார், இதில் வெளியிடப்படும் வீடியோக்கள் அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

மணிமேகலை ரசிகர்களை அவ்வபோது தனக்கு நடந்த ஆக்சிடெண்ட் மூமன்டுக்களை தெரிவித்து கஷ்டப்படுத்துவார். அதேபோல் ஏதாவது புதிதாக ஒன்றை வாங்கினார் என்றால் அதையும் ரசிகர்களிடையே ஷேர் செய்து அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்வார். இவர் வாங்கிய பிஎம்டபிள்யூ கார், இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் புதிய பைக் போன்றவற்றையெல்லாம் வீடியோ பதிவு செய்து தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மணிமேகலையின் வளர்ச்சியை பாராட்டினார்கள். பல கார்கள் மற்றும் பல பைக்குகளை வாங்கி குவித்து ரசிகர்களால் பாராட்டப்படும் ஒரு பெண்மணி இவர்‌.இப்படி எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்க மணிமேகலை தான் புதிதாக வாங்கிய பைக்கை தனது நண்பர் வீட்டில் நிறுத்தி இருந்தார், பைக்கை காணாத நிலையில் பைக் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருக்குமென்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

manimegalai
manimegalai

Leave a Comment