சாப்பிடுவதற்கு பொருள் வாங்க பணம் இல்லாததால் யாருக்கும் தெரியாமல் தனது அண்ணியிடம் பணம் கொடுத்து உதவும் வெற்றி.! ஹோட்டலில் ஆர்டர் பண்ணி சாப்பிடும் அபி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியல் மிகவும் வித்தியாசமான கதைகளத்துடன் அறிமுகமாகி வரும் நிலையில் இளசுகளின் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது வெற்றி சமீபத்தில் அபியை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் வெற்றியை ரவுடி வேலைக்கு போகக்கூடாது என கூறியுள்ளார் அபி எனவே வெற்றி தனக்காக ஒரு நல்ல வேலையை தேடிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இருவரும் மாடியில் ரொமான்ஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலை எல்லோருடைய வீட்டில் இருப்பவர்கள் பார்த்துவிட்டு திட்டி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒருவரின் வீட்டில் ரவுடிகள் இருந்ததால் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ஒரு பெண் வெற்றியிட உதவி கேட்ட நிலையில் வெற்றியும் அந்த ரவுடிகளை அடித்து வெளியில் அனுப்பி விட்டார். இதற்காக நன்றி கூறும் வகையில் வீட்டிற்கு வருகிறார் எனவே இதனை தெரிந்தால் அபி சண்டை போடுவார் என்பதற்காக வெற்றியின் சின்ன அண்ணி அவரை அபியிடம் அழைத்து செல்கிறார்.

ஆனால் எப்படியோ அவர் சொல்ல முடியாமல் போய்விடுகிறது. வெற்றியும் அபிடமிருந்து தப்பித்து விட்டார். மேலும் வெற்றி வெளியில் போய்க் கண்டிருக்கிறார் அப்பொழுது அவருடைய பெரிய அண்ணி ரேஷன் அரிசி வாங்குவதற்காக வரிசையில் இருக்கிறார் இதனை பார்த்த வெற்றி அவரிடம் பேசுகிறார்.

அப்பொழுது அவர் ஏன் ரேஷன் அரிசி வாங்குறீங்க என்று கேட்டதற்கு அத்தை வைத்திருந்த பணத்தை உன்னுடைய கல்யாணத்துக்கு செலவு பண்ணிட்டாங்க இப்ப சாப்பிடுவதற்கு பணம் இல்லை எனக் கூறியதும் வெற்றியை தன்னிடம் இருக்கும் பணத்தை அவரிடம் கொடுத்து உதவுகிறார். வீட்டில் ரேஷன் அரிசியில் சமைத்திருப்பதால் யாரும் சாப்பிடாமல் இருந்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் அபி ஏதோ ஆர்டர் பண்ணி அதனை வாங்கிக் கொண்டு மேலே செல்கிறார் இதனைப் பார்த்து அனைவரும் அவங்களுக்கு என்ன எஜமானி அம்மா ஆர்டர் பண்ணி சாப்பிடுவாங்க நம்மளால சாப்பிட முடியுமா எனக் கூறுவதை அபி கேட்டு விட்டு சொல்கிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment