திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு ரொமான்ஸில் அடித்து நொறுக்கும் விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.! இன்றைய எபிசோட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் இந்த சீரியல் டிஆர்பி_யில் முன்னணி வைக்க வேண்டும் என்பதற்காக திரைப்படத்தை விட அதிகமான ரொமான்ஸ் சீன்கள் இருந்து வருகிறது.

இந்த சீரியல் ஃபாரினில் படித்து முடித்துவிட்டு தனது சொந்த ஊருக்கு வரும் நாகரிகம் உள்ள பண்பாடு நிறைந்த ஒரு பெண் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்கிறார். இன்னொரு புறம் படிக்காமல் ஊரில் ரௌடியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ரௌடி ஒரு ஜோடியின் திருமணத்தை நிறுத்துகிறார் இதனை பார்த்த நாகரீகம் தெளிந்த அந்த பெண் அந்த ரவுடி இடம் தட்டி கேட்க அந்த ரவுடி அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார்.

பிறகு அந்த பெண் அந்தப் பையனின் வீட்டிற்கு சென்று அனைவரையும் எதிர்த்து நான் இங்கு தான் இருப்பேன் எனக் கூறி வருகிறார். இவ்வாறு இந்த பெண் கேரக்டரில் பவித்ராவும், அந்த ரவுடியாக வினோத் பாபுவும் நடித்து வருகிறார்கள். இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இவர்கள் அபி, வெற்றி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்கள்.

இருவரும் பல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் மேலும் இவர்களை அவர்களின் வீட்டில் சேர்த்துக் கொள்ளாத காரணத்தினால் மொட்டை மாடியில் டென்ட் போட்டு வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமணமான நிலையில் இருவரும் ரொமான்ஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் முதலில் துணி காயப்படும் பொழுது தனது அம்மா என்று தெரியாமல் அபி என்று நினைத்துக் கொண்டு கட்டிப்பிடித்து விட்டார் வெற்றி. இதனால் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இதனை தட்டிக் கேட்க சென்ற வெற்றியின் அப்பாவிற்கு தக்காளி அடியும், சின்ன அண்ணிக்கு முட்டையாலும் அடி வாங்கியதுதான் மிச்சம்.

இவ்வாறு அனைவரும் கோபத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது வெற்றி நல்ல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வேலை தேடி போக கிளம்புகிறார் அப்பொழுது அபி லிப்ஸ்டிக் போட்டு விட்டு வெற்றிக்கு முத்தம் தர வீட்டின் கீழே வந்ததும் அனைவரும் வெற்றியைப் பார்த்து சிரிக்கிறார்கள் பிறகு ஏன் இப்படி என்னை பார்க்கிறார்கள் என்று தெரியாமல் முழித்து வந்த வெற்றியின் கன்னத்தில் இருந்த லிப்ஸ்டிக்கை பார்த்துவிட்டு அபி வெளியில் அழைத்து சென்ற துடைத்து விடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Leave a Comment