தனது பொண்டாட்டியிடம் உன்னை சக்தி காதலிப்பதாக கூறும் வெற்றி.! என்ன சொல்வதென்று தெரியாமல் தவிக்கும் அபி..

தற்பொழுது உள்ள ஏராளமான தொலைக்காட்சிகள் தொடர்ந்து புதிதாக சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகியவை சீரியலுக்கென்றே பெயர்போன தொலைக்காட்சிகளாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சன் டிவிக்கு அடுத்ததாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெற்று வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி.  விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டும் போட்டி போட்டுக் கொண்டாலும் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற சேனல்களில் சீரியலை இடம் பெற விடாமல் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  அந்த வகையில் மிகவும் வித்தியாசமாக இதுவரையிலும் இல்லாத அளவிற்கு கதை மாற்றத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும்.

இந்த சீரியலின் ஹீரோவாக சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள வினோத் பாபு.  மற்றும் ஹீரோயினாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த பவித்ரா இருவரும் நடித்து வருகிறார்கள்.  இவர்களைத் தொடர்ந்து இன்னும் பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எதிர்பாராத விதமாக பவித்ரா மற்றும் வினோத் பாபுவிற்கு திருமணம் ஆகிவிடுகிறது.  இந்த சீரியலில் இருவரும் வெற்றி மற்றும் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.  அபி வெற்றியை ஏற்றுக் கொண்டாலும் வெற்றியை ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு விவாகரத்தான நிலையில் தற்பொழுது   இருவருக்கும் வேறு வேறு நபர்களுடன் திருமணமாக இருக்கிறது. அபியின் அத்தை மகன் சக்தி அபியை காதலித்து வரும் நிலையில் அதனை வெற்றியிடம் கூறிய அபியிடம் கூறுமாறு கூறுகிறான்.

வெற்றியும் அபிக்கு போன் செய்து சக்தி உன்னை காதலிக்கிறான்.  உன்னிடத்தில் நானிருந்தால் அவனை திருமணம் செய்து கொள்வேன் எனவே நீ திருமணம் செய்து கொள் என்று கூறுகிறார். பிறகு போனை வைத்தவுடன் வெற்றி அழுது கொண்டிருக்கிறார். பிறகு அபி மீண்டும் வெற்றிக்கு போன் போட்டு வீட்டிற்கு வரச் சொல்கிறார்.

இருவரும் மனதிற்குள் ஆசையை வைத்துக் கொள்ளும் நிலையில் வெளியில் காட்டாமல் கண்களால் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.  பிறகு உடனே அபியின் குடும்பத்தினர்கள் கதவைத் தட்டுகிறார்கள் எனவே வெற்றி தனது வீட்டிற்கு கிளம்புகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment