அபியை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக வெற்றியிடம் கூறும் சக்தி.! வெளிவந்த இன்றைய எபிசோட்..

விஜய் டிவி தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.  மேலும் சமீப காலங்களாக அனைத்து சீரியல்களிலும் ஏராளமான திருப்பங்களுடன் பல டுவிஸ்ட்கள் நிறைந்த வகையில் தொடர்ந்து ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக சீரியல்களை பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து எண்ணை தொடும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.  ரவுடியாக சுற்றி வந்த ஒருவன் அமெரிக்காவில் படித்து முடித்து தன சொந்த ஊருக்கு வந்தும் பாரம்பரியத்தை மறக்காமல் இருந்து வரும் பெண்ணின் கழுத்தில் எதார்த்தமாக தாலி கட்டுகிறான்.

உடனே அந்தப் பெண் அந்த தாலியினை கழட்டாமல் அந்தப் பையனின் வீட்டிற்குப் போய் விடுகிறார்.  அதன்பிறகு இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கிடையே எப்பொழுதும் சண்டை நடந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அபியை விவாகரத்து செய்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார் வெற்றி.  பிறகு வெற்றியின் குடும்பத்தில் உள்ளவர்கள் வெற்றியினை நினைத்து உருகி வரும் அவரின் மாமன் மகளை திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து உள்ளார்கள். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

மேலும் திடீரென்று போலீசார் வெற்றியின் காலில் துப்பாக்கியால் சுட்டு விடுகிறார்கள் உடனே வெற்றி அபிக்கு போன் செய்து அவர் இருக்கும் இடத்தை கூறுகிறார்.பிறகு ஆபியும் தனது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வெற்றியை பார்த்து கொள்கிறார்.  தற்பொழுது வெற்றி உடல்நிலை சரியாகி தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது புதிதாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த எழில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் என்றி கொடுத்துள்ளார். சக்தி மற்றும் அபி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  சக்தியை அழைத்துக்கொண்டு வெளியில் போய் வருமாறு குடும்பத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் அபி வரவில்லை என்று கூறினாலும் வீட்டில் உள்ளவர்கள் சொன்னதால் மாடர்ன் டிரஸ்ஸில் வெளியில் செல்கின்றனர்.

பிறகு சக்தி வெற்றியும் தன்னுடன் அழைத்துச் செல்ல மூவரும் இணைந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பல இடங்களில் சுற்றி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வெற்றிடம் சக்தி  உங்களுக்கு அபியை தெரியுமா இதற்குமேல் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.  பிறகு சக்தி வெற்றிடம் எனக்கு அபியை மிகவும் பிடிக்கும் எனவே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூற வெற்றி மனதிற்குள்ளேயே அதிர்ச்சியடைகிறான். இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment