முழு அரசியல் வாதியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.! வைரலாகும் ப்ரோமோ.

விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையிலும் கால் பதித்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். அதேபோல் வெள்ளித்திரையின் மூலம் அறிமுகமாகி பிறகு சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகர் நடிகைகள் ஏராளம். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து பிறகு ஹீரோயினாகவும் பிரபலமடைந்து தற்போது சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து டாப் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை  சுஜாதா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.  இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் முக்கியமாக இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருவதால் குழந்தை நட்சத்திரங்கள்  முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக திகழ்கிறது.

அதுவும் முக்கியமாக கூட்டு குடும்பம் என்ற ஒன்றை தற்பொழுது மறந்து வாழ்ந்து தனிக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம் எனவே கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி  வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவி தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் ஆண்டுதோறும் எந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது மற்றும் இந்த நடிகர்-நடிகைகள் பிரபலமடைந்து உள்ளார்கள் என்பதை மையமாக வைத்து அவர்களுக்கு அவார்டுகள் தரப்பட்டு வருகிறது.

எனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு,ராஜா ராணி, காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ஒன்றாக இணைந்து தங்களுக்கு அளிக்குமாறு மக்களிடம் கேட்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜாதா அரசியல்வாதி போன்ற வேடத்தில் நடித்துள்ளார்.  இதனைப் பார்த்த ரசிகர்கள் அரசியல்வாதி போலவே மாறிவிட்டிங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment